தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வட சென்னையில் அதிகரிப்பு! - corona in north chennai

சென்னை: கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வட சென்னைப் பகுதிகளில் அதிகரித்துவருகிறது.

corona-in-north-chennai
corona-in-north-chennai

By

Published : Jul 24, 2020, 4:32 PM IST

சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால், வட சென்னை பகுதிகளான தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவெற்றியூரில் வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

குறிப்பாக தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89 விழுக்காட்டினை எட்டிவிட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதனால் மக்கள் மிக கவனத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வட சென்னைப் பகுதிகள்

அதைத்தொடர்ந்து மணலி, சோழிங்கநல்லூர் பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை மிக குறைந்துவருகிறது. மேலும் அதற்கு மாறாக அண்ணாநகர், திருவிக நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் அப்பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னையில் அதிகரிக்கும் குணமானோரின் எண்ணிக்கை!

ABOUT THE AUTHOR

...view details