சென்னைசர்வதேச விமான நிலையம் மற்றும் உள்நாட்டு விமான நிலையம் தற்போது ஆயிரத்து 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் சென்னையில் விமானங்களின் எண்ணிக்கை, பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
எனவே, உள்நாடு மற்றும் சர்வதேச விமான முனையங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நவீன விமான முனையம் 2ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணி நடந்து வருகிறது. சென்னை விமான நிலைய மேம்பாட்டுக்காக கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு பல்லாவரம் மற்றும் பரங்கி மலை பகுதியில் 21.24 ஏக்கர் நிலம் விமான நிலைய ஆணையத்திடம் வழங்கப்பட்டது.
அதில் 10.20 ஏக்கா் நிலத்தை பயன்படுத்தி சென்னை விமான நிலைய ஓடுபாதைகள் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது. இது குறித்து சென்னை விமான நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'சென்னை விமான நிலையத்தில் தற்போது 2 ஓடுபாதைகள் உள்ளன.
முதல் ஓடுபாதை 3ஆயிரத்து 658 மீட்டர் நீளம், 45 மீட்டா் அகலம் உள்ளது. இரண்டாவது ஓடுபாதை 2ஆயிரத்து 890 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம் உடையது. இதில் முதல் ஓடுபாதையின் நீளத்தை மேலும் 400 மீட்டர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், முதல் ஓடுபாதை 4ஆயிரத்து 58 மீட்டர் உடையதாக மாறும்.