தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 14, 2020, 4:56 PM IST

ETV Bharat / state

சென்னையில் 77 விழுக்காடாக உயர்ந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

சென்னை: மாநகராட்சி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 278ல் இருந்து 272ஆக குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 60 விழுக்காட்டில் இருந்து 77 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது.

increase in percent of recoveries of corona patients in chennai
increase in percent of recoveries of corona patients in chennai

கரோனா வைரஸால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டுவருகிறது.

இருப்பினும், நோய்த்தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தப் பரவலை தடுக்கும் வகையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முழுத் தெருவையும் கட்டுப்படுத்தப்பட்டப் பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது.

இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தனிமைப்படுத்தி, கட்டுப்படுத்தப்பட்டப் பகுதியாக மாநகராட்சி அறிவிக்கத் தொடங்கியது.

அதன்படி, சென்னையில் ஏற்கனவே 278 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 272ஆக குறைந்துள்ளது.

மண்டல வாரியாக கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகளின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

  • தண்டையார்பேட்டை - 50
  • திரு.வி.க நகர் - 10
  • அம்பத்தூர் - 6
  • அண்ணா நகர் - 43
  • கோடம்பாக்கம் - 134
  • வளசரவாக்கம் - 13
  • ஆலத்தூர் - 5
  • பெருங்குடி - 9
  • சோழிங்கநல்லூர் - 2

சென்னையில் மொத்தம் 78 ஆயிரத்து 573 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,694ஆக உள்ளது.

சென்னையில் குறைந்த கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

ஜூன் 30ஆம் தேதி வரை தொற்றினால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 60% விழுக்காடாக இருந்தது. தற்போது 60 ஆயிரத்து 694 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 77 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தாலும் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் தினமும் உயர்ந்துவருகிறது. இது மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மண்டல வாரியான குணமடைந்தவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு:-

  • ராயபுரம் - 8,302 நபர்கள்
  • தண்டையார்பேட்டை - 6,955 நபர்கள்
  • தேனாம்பேட்டை - 6,991 நபர்கள்
  • கோடம்பாக்கம் - 6,178 நபர்கள்
  • அண்ணா நகர் - 7,012 நபர்கள்
  • திருவிக நகர் - 5,046 நபர்கள்
  • அடையாறு - 3,840 நபர்கள்
  • வளசரவாக்கம் - 2,928 நபர்கள்
  • அம்பத்தூர் - 2,806 நபர்கள்
  • திருவெற்றியூர் - 2,244 நபர்கள்
  • மாதவரம் - 1,979 நபர்கள்
  • ஆலந்தூர் - 1,550 நபர்கள்
  • பெருங்குடி - 1,636 நபர்கள்
  • சோளிங்கநல்லூர் - 1,252 நபர்கள்
  • மணலி - 1,149 நபர்கள்

இதையும் படிங்க...கரோனா: 2 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details