சென்னை : திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் & குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி உயர்வு- தமிழ்நாடு அரசு - சென்னை மாவட்ட செய்திகள்
திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் & குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் 164 விழுக்காட்டில் இருந்து 196 விழுக்காடாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 01-01-2022 முதல் திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை 17 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக பெறும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி விகிதத்தைத் திருத்தியமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்; மொழிப்போர் தியாகிகளுக்கு ஈபிஎஸ் ட்வீட்
TAGGED:
சென்னை மாவட்ட செய்திகள்