தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாக்டவுனில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு - அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - chennai latest news

சென்னை: லாக்டவுனில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவது குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

லாக்டவுனில் குழந்தை திருமணம் அதிகரிப்பு
லாக்டவுனில் குழந்தை திருமணம் அதிகரிப்பு

By

Published : May 31, 2021, 4:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணங்களை தடுப்பது குறித்து விழுப்புரம், திருச்சி, நெல்லை, தஞ்சாவூர், தூத்துக்குடி, சிவகங்கை, நாகை, சேலம், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுடன் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்
அதில், தமிழ்நாட்டில், கரோனா பேரிடர்காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளது என்றத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், குழந்தைகள் நலக் குழுமம், கள அலுவலர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினார்.

எனவே, இதனைத் தடுக்க சமூக நலத்துறை அமைச்சர் 20க்கும் மேற்பட்ட மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு விளக்கம் கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: சசிகலா செல்போன் அழைப்பால் உற்சாகமான தொண்டர்!

ABOUT THE AUTHOR

...view details