தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரவணா ஸ்டோர்ஸில் 4ஆவது நாளாகத் தொடரும் ஐடி ரெய்டு - வருமான வரித்துறையினர் சோதனை

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமானவரித் துறையினர் நான்காவது நாளாக இன்றும் சோதனை நடத்திவருகின்றனர்.

சரவணா ஸ்டோர்ஸ்
சரவணா ஸ்டோர்ஸ்

By

Published : Dec 4, 2021, 12:02 PM IST

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள மிகவும் பிரபலமான வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ், அதன் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து அதிரடியாகச் சோதனை நடத்திவருகின்றனர்.

இந்தச் சோதனையானது தொடர்ந்து இன்று (டிசம்பர் 4) நான்காவது நாளாக நடைபெற்றுவருகிறது. தி. நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளிலுள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. அதுமட்டுமின்றி சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான ராஜரத்தினம் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

சுமார் 12 இடங்களில் நடைபெறும் இந்தச் சோதனையில் 100-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் சோதனை நடந்து முடிந்த பிறகே கைப்பற்றப்பட்டவை என்னென்ன என்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பிரபல ஜவுளிக் கடையில் சிக்கியதென்ன? பகீர் தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details