சென்னையில் திமுக பிரமுகர், திரைப்பட இயக்குநருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் எட்டு இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் கண்ணன் பாலா நகரில் செயல்பட்டுவரும் வசந்தம் புரமோட்டர்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனம், சென்னை மேற்கு அண்ணா நகர்ப் பகுதியில் இயங்கிவரும் மகாலட்சுமி பில்டர்ஸ் மற்றும் லேண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனம் உள்பட எட்டு இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று (நவம்பர் 17) திடீர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
பல குழுக்களாகப் பிரிந்து ஒரு இடத்திற்கு ஆறுக்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
வருமான வரித் துறையினர் சோதனை தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட்
குறிப்பாக வசந்தம் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஜவகர் தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். மேலும் இவர் 2017ஆம் ஆண்டு பயமா இருக்கு என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்தும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித் துறையினர் சோதனை அதேபோல் மகாலட்சுமி பில்டர்ஸ் மற்றும் லேண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லோகேஷ். சென்னை கிழக்குப் பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
வரி ஏய்ப்பு
வருமான வரித் துறையினர் சோதனை இவர்கள் வருமானத்தை மறைத்துக் காட்டி பல நிறுவனங்களுக்கு முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுக்குத் தொடர்புடைய நிறுவனம், வீடு உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை மேற்கொண்டுவருவதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.