தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிக்கிய நிறுவனம்..! வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..! - காவ்மன் பார்மா

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கன்வர் லால் குழுமத்தின், கான்மன் பார்மா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 11:08 PM IST

சென்னை: கன்வர் லால் குழுமத்திற்குத் தொடர்புடைய நிறுவனங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கன்வர் லால் குழுமத்தின் நிர்வாகிகள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சென்னையில் மருந்து தயாரிக்க கூடிய நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் காவ்மன் (Kawman) பார்மா என்ற நிறுவனம் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மருந்து பொருட்களை உற்பத்தி செய்யப்பட்டு சீனா, தைவான், இஸ்ரேல் போன்ற பல நாடுகளுக்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு ரசாயன பொருட்களை உற்பத்தி செய்தும், வினியோகம் செய்து வருகின்றது.

இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் இருக்கும் குடோனில், 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் காவ்மன் பார்மா நிறுவனத்தின் சோதனை கூடத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவ்மன் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்குத் தொடர்புடைய சில நிறுவனங்கள் சென்னை பாரிமுனை பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

அந்த நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதேபோல் அம்பத்தூர், அண்ணாநகர் போன்ற பகுதிகளிலும், இந்நிறுவனத்திற்குச் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக கன்வர் லால் குழுமத்தின் கீழ் இயங்கும் நிறுவனம், கடந்த 2009ஆம் ஆண்டு சீனாவில் இருந்து 100 கிலோ அளவில் போலி மருந்து பொருட்கள் இறக்குமதி செய்தது சிபிஐயின் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கன்வர் லால் குழுமத்தின் நிறுவனம் தற்போது வருமான வரித்துறையின் வலையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களில் மேலும் 17 பேர் சென்னை அழைத்துவரப்பட்டனர்!

ABOUT THE AUTHOR

...view details