சென்னை:பூவிருந்தவல்லி சாலையில் தாசப்பிரகாஷ் சந்திப்பு அருகே உள்ள பிரின்ஸ் கோர்ட்யார்டு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், ஃபாரஸ் ஜெயின்.
இவர் மொத்த கற்பூர வியாபாரம், வேதிப்பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஃபாரஸ் ஜெயின் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
வருமான வரி சோதனை நடைபெற்ற கொத்தவால்சாவடி இடம் தொடர்பான காணொலி பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
இதனைத் தொடர்ந்து இன்று (செப்.23) காலை 7 மணி முதல் பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் கொண்ட ஒரு குழுவினர் ஃபாரஸ் ஜெயின் வீட்டிலும், மற்றொரு குழுவினர் கொத்தவால்சாவடி ஸ்டார்டன் முத்தையா தெருவில் உள்ள இடத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இவருக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க:சசிகலாவுக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து