சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள பெருங்குடி, கந்தன்சாவடி, ஸ்ரீபெரும்புதூர், ஆவடி சிப்காட் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வரும் தனியார் மென்பொருள் நிறுவனங்களில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது இந்த சோதனையானது முழுக்க முழுக்க மென்பொருள் நிறுவனங்களை குறிவைத்து மட்டுமே நடத்தப்படுவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அமலாகத்துறை மற்றும் வருமான வரித்துறை ஒவ்வொரு துறையில் செய்யப்படும் முறைகேடுகள் குறித்தான புகார்களை பெற்றுக்கொண்டு மணல் குவாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை கைப்பற்றி வருகிறது.