தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினிக்கு எதிரான வருமானவரி வழக்கு மனு தள்ளுபடி - சென்னை உயர் நிதீமன்றம் உத்தரவு - ரஜினிக்கு எதிரான வருமான வரி வழக்கு

சென்னை: ரஜினிகாந்துக்கு எதிரான வருமான வரி வழக்கு திரும்பப் பெற்றதையடுத்து, வருமான வரித் துறையின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

HC
HC

By

Published : Jan 28, 2020, 11:17 PM IST

நடிகர் ரஜினிகாந்த், 2002 முதல் 2005ஆம் ஆண்டுவரை வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என கூறி, 2002 - 2005 வரையிலான மூன்று நிதியாண்டுகளுக்கு சேர்த்து 66 லட்சத்து 22 ஆயிரத்து 436 ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸ் ரத்து செய்யக்கோரி நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ரஜினிக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது. கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி வருமானவரித் துறை, மேல் முறையீட்டு தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வருமானவரித் துறை சார்பில், 2014ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வருமானவரித் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதத் தொகைக்கு புதிதாக வழக்கு தொடர்வது இல்லை எனவும், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, வருமானவரித் துறை சுற்றறிக்கையை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் ரஜினிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற வருமானவரித் துறைக்கு அனுமதி அளித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details