சென்னை:முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் அதிகம் செலவாகும் சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் பெறலாம்.
இந்த திட்டத்தில் பயனாளியாவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு 72 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு வருமான வரம்பை ஒரு லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.