தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 17, 2022, 9:50 PM IST

ETV Bharat / state

கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்கள் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க கோரி போராட்டம்... பாஜக கவுன்சிலர்உட்பட 75 பேர் மீது வழக்கு...

கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்கள் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டவிரோதமாக கோவிலில் போராட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர், வழக்கறிஞர் உட்பட 75 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

கோயிலில் சட்டவிரோதமாக போராட்டம் ; பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 75 பேர் கைது
கோயிலில் சட்டவிரோதமாக போராட்டம் ; பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 75 பேர் கைது

சென்னை:மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் உள்ளது. இந்த கோயிலில் அறநிலையத்துறை அலுவலர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பின.

இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று மாலை 6.15 மணியளவில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேஷ், இந்து தமிழர் கட்சியின் தலைவர் ரவி உட்பட 75-க்கும் மேற்பட்டோர் கபாலீஸ்வரர் கோயிலுக்குள் தரிசனம் செய்ய வந்தனர்.

அதன்பின் கோயிலின் நான்காவது வாயிலின் கதவை மூடி நவராத்திரி மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அறநிலையத்துறை நடவடிக்கைகளை கண்டித்தும், கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்(own your Temple) என்றும் கோரிக்கையை வலியுறுத்தினர். இதனால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சட்டவிரோதமாக கோயிலுக்குள் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் காவேரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 31ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேஷ், இந்து தமிழர் கட்சி தலைவர் ரவி உட்பட 75 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அனுமதியின்றி கூடுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அனைவரும் மயிலாப்பூர் காவல்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி... மாணவியே நேரடியாக OMR சீட்டை ஆய்வு செய்ய அனுமதி...

ABOUT THE AUTHOR

...view details