தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட செல்வ வரி வழக்கு - தீபா, தீபக்கை வழக்கில் சேர்த்த உயர் நீதிமன்றம் - Include deepa and Deepak on jayalalitha wealth tax remission case

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட செல்வ வரி வழக்கு விசாரணையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த நிலையில் அந்த வழக்கில் ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செயலலிதா மீது தொடரப்பட்ட செல்வ வரி வழக்கு
செயலலிதா மீது தொடரப்பட்ட செல்வ வரி வழக்கு

By

Published : Mar 14, 2022, 3:23 PM IST

சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2008 - 2009ஆம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax) கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர், அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், 2008ஆம் ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாரயணபிரசாத் அமர்வில் விசாரணையில் உள்ளது.

ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனுமதி கோரி வருமான வரித்துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (மார்ச் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனுமதித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், வழக்குத் தொடர்பான ஆவணங்களை தீபா, தீபக் தரப்புக்கு வழங்க வருமான வரித்துறை தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:4 மாநில தேர்தல் வெற்றி... மக்களவை வந்த பிரதமர் "மோடி, மோடி..” என முழக்கமிட்ட எம்பி.க்கள்

ABOUT THE AUTHOR

...view details