தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ஊக்க மதிப்பெண் விவகாரத்தில் தலையிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்! - மாநில அரசின் உரிமையில் தலையிட முடியாது

மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Incentive marks to PG students is state policy MHC upholds state order
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Aug 15, 2023, 8:42 PM IST

சென்னை: எம்.டி, எம்.எஸ் போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு போட்டியிடும் அரசு மருத்துவர்களுக்கு, 30 சதவீதம் ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என கடந்த 2020ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. எந்த மாநிலத்திலும் 30 சதவீத ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை என்றும், அரசின் கொள்கை முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்லாமல் அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானதாக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேநேரம், கிராமப் புறங்கள், தொலைதூர பகுதிகள், மலை பகுதிகளில் அரசு மருத்துவர்களாக பணியாற்றியவர்களுக்கு 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்கப்படுவதாகவும், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதவிட ஒதுக்கீடு வழங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அந்த இட ஒதுக்கீட்டில் சேரும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என அரசு மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் 2 ஆயிரத்து 266 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 330 அரசு மருத்துவமனைகளும் உள்ளதால், அங்கு அதிக மருத்துவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு அதிகம் என கூற மனுதாரர்கள் தரப்பில் எந்த அடிப்படை ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவ மேற்படிப்பை முடிக்கும் அரசு மருத்துவர்கள், பணி ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளிலேயே பணியாற்றுவர் எனத் தெரிவித்த நீதிபதிகள், கிராமப் புறங்கள், தொலைதூர பகுதிகள், மலை பகுதிகளில் பணியாற்றுவதை ஊக்கப்படுத்தவே ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்பதால் இது சம்பந்தமான அரசின் கொள்கை முடிவில் எந்த தவறும் இல்லை. அதில் தலையிட முடியாது எனக் கூறி, மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.

இதையும் படிங்க: நீட் குறித்து மு.க ஸ்டாலின் உரை: கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details