தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை? - சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் நாளை போரூர், வானகரம், ஆவடி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின் பகிர்மானக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை..?
சென்னையில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை..?

By

Published : Oct 14, 2022, 8:13 PM IST

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூர், ஐ.டி. காரிடர் பகுதிகளில் கீழ்க்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் தெரிவித்துள்ளது.

போரூர் பகுதியில்:பூந்தமல்லி ருக்மணிநகர், முத்தமிழ்நகர், நண்பர்கள்நகர், தேவதாஸ் நகர், மலையம் பாக்கம் கோவூர் பாலாஜிநகர், பூசணிகுளம் மற்றும் பஜார் மெயின் ரோடு, சுபலட்சுமிநகர், பாபு கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், அடையாறு பகுதியில் ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல் தேவிநகர், பெத்தல் நகர் 1 முதல் 24-வது தெரு வடக்கு, திருவள்ளுவர் சாலை, ஈ.சி.ஆர். பகுதி, தாமஸ் அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

வானகரம் பகுதியில்: எஸ்.ஆர்.எம்.சி செட்டியார் அகரம் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், திரு.வி.க நகர், நூம்பல்மெயின்ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும், ஆவடி பகுதியில் ஜே.பி.நகர், செந்தில்நகர், கலைமகள் நகர், பிருந்தாவன் அவென்யூ, முருகப்பா பாலிடெக்னிக் , பி.எஸ்.என்.எல். சி.டி.எச்.ரோடு, ஆவடி பேருந்து பணி மனை, கஸ்தூரி பாய்நகர் செங்குன்றம் பாலவாயல், கோமதி அம்மன் நகர், சக்ரா கார்டன், கண்ணம்பாளையம், பி.டி.மூர்த்தி நகர், கல்பக நகர், மருதுபாண்டி நகர் புழல் மகாவீர் கார்டன், சக்திவேல் நகர், சிவராஜ் தெரு, காந்தி மெயின் ரோடு, மேக்ரோ மார்வெல் நகர் பட்டாபிராம் ராஜிவ் காந்தி நகர், அண்ணாநகர், பாலாஜி நகர், செந்தமிழ் நகர், விவேகானந்தா அவென்யூ, மிட்டணமல்லி காலனி, பிருந்தாவனம் நகர், கேரிசன் உள்ளிட்ட இடங்களில் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்

அம்பத்தூர் பகுதியில்:அயப்பாக்கம் 1000 முதல் 8,500 டி.என்.எச்.பி. அயப்பாக்கம், வி.ஐ.பி. பாக்ஸ். ஐ.டி.காரிடர் பகுதி பிள்ளையார் ஈ.டி.எல் கோயில் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி, அஞ்சல் அலுவலகம், ஓ.எம்.ஆர்.பகுதி உள்ளிட்ட இடங்களில் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இளநிலைப் பட்டப்படிப்புகளில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம்!

ABOUT THE AUTHOR

...view details