திமுக மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று காலை உயிரிழந்தார்.
இதனையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மூன்று இடங்கள் காலியாகியுள்ளன. முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் குடியாத்தம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து திருவொற்றியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி இயற்கை எய்தினார்.
தற்போது அன்பழகன் மறைந்ததையடுத்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 98லிருந்து 97ஆக குறைந்துள்ளது.
இருந்தபோதிலும் காலியான மூன்று இடங்களுக்கான சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறாது. ஏனெனில் இந்த ஆட்சி அடுத்த ஆண்டு 2021 மே மாதத்துடன் முடிவடைகிறது. இதன் காரணமாக இடைத்தேர்தல் வைக்காமல் ஒட்டுமொத்தமாக 2021இல் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் அதிகமென கருதப்படுகிறது.
இதையும் படிங்க...கரோனாவால் உயிரிழந்த ஜெ. அன்பழகனுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்?