தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாசின் பேச்சால் சட்டப்பேரவையில் சலசலப்பு! - கேள்வி நேரத்தின் போது சட்டப்பேரவையில் சலசலப்பு

சென்னை: கேள்வி நேரத்தின் போது, சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் கூறிய கருத்தால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

கருணாசின் பேச்சால் சட்டப்பேரவையில் சலசலப்பு!
கருணாசின் பேச்சால் சட்டப்பேரவையில் சலசலப்பு!

By

Published : Mar 17, 2020, 12:44 PM IST

Updated : Mar 17, 2020, 2:31 PM IST

சட்டப்பேரவையில் இன்று மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றுவருகிறது.

அதில் கேள்வி நேரத்தின்போது, மறைந்த தலைவர் ஒருவரை திருவாடானை உறுப்பினர் கருணாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் ஆவேசமடைந்த திமுக உறுப்பினர்கள் எழுந்து அமளியில் ஈடுபட்டு கருணாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களும் எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் குறுக்கிட்டு, உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது எனக் கருணாஸுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அவை முன்னவர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் கேள்வி நேரத்தில் கேள்வி மட்டுமே கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

இதனையடுத்து, கருணாஸ் பேசியது அவைக்குரிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சட்டப்பேரவை நிகழ்வுகள்: உடனுக்குடன் வழங்குகிறது நமது ஈடிவி பாரத்

Last Updated : Mar 17, 2020, 2:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details