இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
'இதுவரை ரூ. 265.45 கோடி பறிமுதல்' - சத்யபிரதா சாகு - Tamil Nadu Election Officer Satyaprada Saku
சென்னை: இதுவரை 265.45 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
In Tamil Nadu so far Rs. 265.45 crore confiscated
இவ்வாறாக சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 265.45 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் ரொக்கமாக 115.02 கோடி ரூபாய், 1.87 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,40,358.75 லிட்டர் மதுபானங்கள், 128.88 கோடி ரூபாய் மதிப்புள்ள 443 கிலோ கிராம் தங்கம், 1.65 கோடி ரூபாய் மதிப்புள்ள 324.231 கிலோ கிராம் வெள்ளி என மொத்தம் 265.45 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு குறிப்பிட்டுள்ளார்