சென்னை: கடந்த ஆறு நாட்களாக தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வந்தது. நேற்று இரவு பெய்த கடும்மழையால் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரத்தில் உள்ள வள்ளுவர்பேட்டை மூன்றாவது தெரு 13ஆவது வார்டு பகுதியில் மழைநீர் கால்வாய் இல்லாததால் மழை நீரும் கழிவு நீரும் கலந்து வீட்டிற்குள் புகுந்தது.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை வாளி மூலம் வெளியேற்றி வருகின்றனர்.