கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை டி.எம்.எஸ்.இல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று தனியார் மருத்துவமனை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், கரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்ற தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில் உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், ஓமந்துரார் சிறப்பு மருத்துவமனையில் 350 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வளாகம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வளாகம் நாளை மறுநாளிலிருந்து செயல்பட உள்ளதாதவும் தெரிவித்தார். மருத்துவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில்கொண்டு, தினந்தோறும் 60 ஆயிரம் முகக்கவசங்கள் விநியோகிப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.