தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட சென்னையில் 7 மணி நேரமாக கன மழை: பொதுமக்கள் அவதி! - North Chennai heavy rainfall

சென்னை: வடசென்னை பகுதிகளில் 7 மணிநேரத்திற்கு மேலாக இரவிலிருந்து பெய்துவரும் கனமழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயுள்ளனர்.

North Chennai rain fall
North Chennai rain fall

By

Published : Oct 29, 2020, 2:58 PM IST

வடசென்னை பகுதிகளான வண்ணாரப்பேட்டை, ராயபுரம் , திருவொற்றியூர், தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் இரவிலிருந்து சுமார் ஏழு மணி நேரமாக கன மழை பெய்துவருகிறது. இதனால் பல பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நீர் தேங்கி உள்ளது வாகனங்கள் தேங்கி உள்ள நீர்களில் செல்லும் போது வாகனங்கள் பழுதாகி நின்றும் விடுகிறது.

மேலும் மழை நீர்கள் இடுப்பளவு தேங்கி உள்ளதால் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு முழுவதும் பெய்து வருகின்ற மழையால் காசிமேடு மீன் சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்ய முடியாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் பெய்த மழைக்கே பல சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. இனி வரும் காலங்களில் மழை பெய்தாலும் நீர் தேங்காத அளவுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடசென்னை பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க...அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பலத்த மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details