கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் உத்தரவை மீறி செயல்படும் தொழிற்சாலைகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக சென்னையில் மாநகராட்சி, வருவாய், காவல் துறையினர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முகப்பேர் கிழக்கு தொழிற்பேட்டையில் உள்ள கார்மெண்ட்ஸில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருவதாக மாநகராட்சி அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.