சென்னை: வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் இந்துமதி (25), இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரைச் சேர்ந்த குமரன் (37), என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆன நாள் முதலே இந்துமதியை அவரது மாமியார் சாந்தி, ராசியில்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருமணம் ஆகி 5 மாதம் மட்டுமே ஆன நிலையில் 4 மாத கர்ப்பிணியாக உள்ள ப இந்துமதி மாமியாரின், தொடர் துன்புறுத்தல் காரணமாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து இந்துமதியை அழைத்துச் செல்ல கணவர் வராததால் சோகத்தில் இருந்துள்ளார். கணவர் தாய் பேச்சைக் கேட்டுக் கொண்டு நம்மைக் கண்டு கொள்வதில்லையே என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலையால் உயிரிழந்தார்.