மருத்துவத்தன்மை வாய்ந்த வாட்டர் ரோஸ் ஆப்பிள், நெல்லிக்காய் வகைகளில் ஒன்றாகும். இந்தப் பழங்கள் புளிப்பு சுவை தன்மை கொண்டது. இந்தப் பழம் நீரழிவு நோயைக் குணப்படுத்தும். மேலும் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, கைகால் வலிப்பு நோய்களை குணப்படுத்தும் மருத்துவத் தன்மை கொண்டதாகக்கூறப்படுகிறது.
பொதுவாக வாட்டர் ரோஸ் ஆப்பிள், கேரளாவில் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த வகை ஆப்பிள்கள் மலைப்பிரதேசங்களில் மட்டும் விளைகிறது. அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோம்பை, தாண்டிக்குடி பகுதிகளில் வாட்டர் ரோஸ் ஆப்பிள் மரங்கள் உள்ளன.
தற்போது வாட்டர் ரோஸ் ஆப்பிள் சீசன் என்பதால், அதிக அளவு பழங்கள் விளைந்துள்ளன. ஆனால் அவற்றை சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக, பறவைகளுக்கு உணவாக மரங்களிலேயே மலைவாழ் விவசாயிகள் விட்டுவிடுகின்றனர். இதனால் வாட்டர் ரோஸ் ஆப்பிள்கள் பறவைகளுக்கு உணவாகியுள்ளது.
பல இடங்களில் பழங்கள் மரத்தில் இருந்து உதிர்ந்து வீணாகி வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே தோட்டக்கலை துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து வாட்டர் ரோஸ் ஆப்பிள்களை விற்பனை செய்ய சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க...ஆதரவற்றவர்களுக்கு வாழ கற்றுக்கொடுத்த கரோனா முகாம்!