செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை அடுத்த மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர் சிகு குமார் (45) உள்பட மூன்று பேருக்கு மூச்சுத் திணறல், காய்ச்சல் போன்ற கரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில், காவல் ஆய்வாளர் உள்பட மூன்று காவலர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் காவல் ஆய்வாளர்கள் இருவருக்கு கரோனா உறுதி! - tn corona updates
சென்னை: விமான நிலைய காவல் ஆய்வாளர் உள்பட இரண்டு காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
police station
இதையடுத்து மூவரும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேபோல் சென்னை விமான நிலைய காவல் ஆய்வாளர் கண்ணனுக்கும் (42) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும், மீனம்பாக்கம் காவல் நிலையம், விமானநிலைய காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:‘தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இல்லை’