செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டியில் செயல்பட்டுவரும் மின்சாதன பொருள்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்துவந்தனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணிமுதல் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னதாகவே திடீரென தொழிற்சாலை நிர்வாகம் ஆலையை மூடி தொழிலாளர்களுக்குப் பணி இல்லை எனத் தெரிவித்துள்ளது.