தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாழை நாரினால் நெய்யப்பட்ட புடவை - அறிமுகம் செய்து வைத்த கோவா ஆளுநர்

அனகாபுத்தூரில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழு, வாழை நாரினால் நெய்த புடவையை கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை அறிமுகம் செய்து வைத்தார்

By

Published : Jul 10, 2022, 10:24 AM IST

சென்னையில் கோவா ஆளுநர் வாழை நாரினால் செய்யப்பட்ட புடவையை அறிமுகம் செய்தார்
சென்னையில் கோவா ஆளுநர் வாழை நாரினால் செய்யப்பட்ட புடவையை அறிமுகம் செய்தார்

சென்னை: அனகாபுத்தூரில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழு, வாழை நாரினை இணைத்து நெய்த புடவையை கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை அறிமுகம் செய்து வைத்தார். அனகாபுத்தூரில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் இயற்கை நார்களை பயன்படுத்தி புடவைகளை தயாரித்து வருகின்றனர்.

வாழைநார், கத்தாழை, வெட்டிவேர் உள்ளிட்ட இயற்கை பொருள்களை பயன்படுத்தி கையால் நெய்யப்படும் சேலைகளில் பருத்தி மற்றும் இயற்கை நார்களையும் பயன்படுத்தி உள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுவதுடன், உடல் நலத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இயற்கை நார்களை பயன்படுத்தி நெசவு செய்யப்பட்ட சேலையை கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை கந்தேஸ்வரா ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநர் கந்தஸ்வர்னாவிடம் அளித்து அறிமுகம் செய்தார். மேலும் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை பேசியபோது, “இந்தியா சுதந்திரம் அடையும்போது அரசியல் சமூக நீதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிலும் சுதந்திரம் வேண்டுமென தியாகிகள் பாடுபட்டனர்.

சுதந்திரம் அடைந்தவுடன் அரசியல் சுதந்திரம் பெற்றோம். அதேபோல் சமூகநீதியில் ஜாதிகள் ஒழிக்கப்பட்டது. காந்தியடிகளின் சுதேசி கொள்கையின் மூலம் தற்போது இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறது” என தெரிவித்தார்.

கந்தேஸ்வரா ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநர் கந்தஸ்வர்னா வாழை நாரினால் செய்யப்பட்ட புடவை குறித்து கூறும்போது, “வாழை நாரினால் உருவாக்கப்பட்ட சேலையை அறிமுகம் செய்துள்ளோம். வாழை நாரின் மூலம் செய்யப்பட்டுள்ளதால் உடலுக்கும் நல்லது. பாலிஸ்டர் அக்கர் லீக் போன்ற இழைகளால் செய்யப்பட்ட புடவைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

வாழை நாரினால் செய்யப்பட்ட புடவை

நாம் பயன்படுத்தும் ஒரு பிளாஸ்டிக் கவரும் ஒரு பாலிஸ்டர் புடவையும் ஒரே அளவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாழைநார், புளிச்சக்கீரை நார், கற்றாழை நார் போன்றவற்றை பயன்படுத்தி நெய்யப்படும் சேலைகளை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வாழை நார் சேலைக்கு அக்மார்க் முத்திரை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என தெரிவித்தார்.


ஹிந்துஸ்தான் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறை தலைவர் ஸ்ஷரித்தா கூறும்போது, “வாழை நாரினை பயன்படுத்தி சேலைகளை உற்பத்தி செய்வதால் அதனை பயன்படுத்துவோர் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். இயற்கை நாரினால் செய்யப்படும் சேலைகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்.

இயற்கை நார்களினால் ஆன சேலைகளை உற்பத்தி செய்வது குறித்து ஆராய்ச்சியில் மேற்கொண்டால் அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும். பொதுமக்கள் இதுபோன்ற சேலைகளை வாங்கி பயன்படுத்தும்போது விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு அதிகளவில் வருமானம் கிடைக்கும்” என்றார்.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் மகளின் லேப்டாப்பை பறிமுதல் செய்தது சட்டவிரோதம் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details