தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் நிலவி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, அந்நாட்டு பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. அந்தவகையில், இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்துள்ளது.