கரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க சமூக விலகல் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி பின்பற்றாத கடைகளை அரசு அலுவலர்கள் சீல் வைத்துவருகின்றனர்.
அந்த வகையில் சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராமில் செயல்பட்டு வந்த மாநகராட்சிக்குச் சொந்தமான மீன் மார்கெட்டில், நோய் தொற்று ஏற்படும் விதமாக பொதுமக்கள் அதிக அளவில் சமூக விலகலை பின்பற்றப்படாமல் மீன் வாங்க குவிந்தனர். இதனால் நோய் தொற்று ஏற்பட அதிக சாத்தியங்கள் இருப்பதால் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் என அனைவரையும் வெளியேற்றிவிட்டு பூட்டு போட்டு அலுவலர்கள் மூடினர்.