தற்போது மீண்டும் சென்னையில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இருப்பினும் நோய்த்தொற்று குறையாமல் குறிப்பிட்ட பகுதிகளான அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற இடங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வைரஸ் தொற்று அதிகரித்தாலும் குணமடைந்தவரின் விழுக்காடும் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் குணமடைந்தவரின் சதவீதம் 90 விழுக்காடுக்கு மேல் உள்ளது.
அதேபோல் வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சிகிச்சை பெற்று வருபவரிகளில் விழுக்காடும் அதிகரித்துவருகிறது.
சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 376 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 846 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 11 ஆயிரத்து 320 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்து 210 பேர் இந்த தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியாக குணமடைந்தவரின் பட்டியல்
- கோடம்பாக்கம் - 17,208 பேர்
- அண்ணா நகர் - 17,093 பேர்
- ராயபுரம் - 14,648 பேர்
- தேனாம்பேட்டை - 14,438 பேர்
- தண்டையார்பேட்டை - 12,527 பேர்
- திரு.வி.க. நகர் - 11,590 பேர்
- அடையாறு - 11,844 பேர்
- வளசரவாக்கம் - 9,893 பேர்
- அம்பத்தூர் - 10,796 பேர்
- திருவொற்றியூர் - 4,734 பேர்
- மாதவரம் - 5,468 பேர்
- ஆலந்தூர் - 6,062 பேர்
- சோழிங்கநல்லூர் - 4,361 பேர்
- பெருங்குடி - 5,260 பேர்
- மணலி - 2,360 பேர்
இதையும் படிங்க...புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது - உயர் நீதிமன்றம் வேதனை!