தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று (மே 17) மட்டும் 6,150 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்க மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை என இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கு காலத்தில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும், சென்னையில் நேற்று (மே 17) மட்டும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,855 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.