தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் உருவபொம்மை எரிப்பு: திமுக செயலாளர் உள்பட 26 பேர் கைது! - DMK secretary arrested

சென்னை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் உருவ பொம்மையை எரித்த வழக்கில், திமுக பகுதி செயலாளர் உள்பட 26 பேர் கைது செய்யப்படுள்ளனர்.

அமைச்சர் உருவபொம்மை எரித்த வழக்கில் திமுக செயலாளர் உள்பட 26 பேர் கைது!

By

Published : Nov 7, 2019, 12:56 PM IST

அண்மையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைப் பற்றி தமிழ்ப்பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவதூறாகப் பேசிதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனைக் கண்டித்து, நேற்று மாலை திமுக அண்ணா நகர் வடக்குப் பகுதி செயலாளர் பரமசிவம் தலைமையில் சுமார் 30 பேர், மாஃபா பாண்டியராஜனின் இரண்டு உருவ பொம்மைகளை எரித்து முழக்கமிட்டனர். அண்ணா நகரில் அமைந்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீட்டின் முன்பாக இந்தச் சம்பவம் நடைபெற்றது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அண்ணா நகர் வடக்குப் பகுதி செயலாளர் பரமசிவம் உள்பட 26 பேரை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details