தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 24 மின்சார ரயில் சேவை ரத்து - சென்னை புறநகர் ரயில் நிலையம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து 18 மின்சார ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து 6 மின்சார ரயில்கள் என மொத்தம் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 24 மின்சார ரயில்கள் ரத்து

By

Published : Apr 6, 2019, 2:59 PM IST


பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஏப்ரல் 7ஆம் தேதி) சென்னையில் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு, அதன்பின் பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது.

நாளை இயக்கபடும் சிறப்பு ரயில்கள்:

காலை 8.50, 9.40 மணிக்கு திருத்தணி- அரக்கோணம்

காலை 9.45 மணிக்கு மூர்மார்க்கெட்-அரக்கோணம்

காலை 11.55, 1.50, 2.25 மணிகளுக்கு அரக்கோணம்-திருத்தணி

பிற்பகல் 1.50 மணிக்கு ஆவடி-பட்டாபிராம் வரை இயக்கபடவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details