தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 21 நாட்களில் கடன் - உதயநிதி ஸ்டாலின் தகவல்

2022 - 23ஆம் நிதி ஆண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 25,219 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 21 நாட்களில் சுய உதவிக் குழுவினருக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

budget
உதயநிதி

By

Published : Mar 28, 2023, 1:59 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.28) கேள்வி நேரத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கிக்கடன் பெற மாதம் ஆறு முறை குழு கூட்டம் நடத்தி சேமிப்பு செய்து கணக்கு புத்தகங்களை முறையாக பராமரிக்க வேண்டும். சுய உதவி குழு கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடனுதவி உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் சுய உதவிக் குழுவினரின் வங்கி கணக்கிற்கு கடன் தொகை செலுத்தப்படுகிறது. 21 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2022 - 23ஆம் நிதி ஆண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 25,219 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்துள்ளோம். இதன் மூலம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 349 சுய உதவி குழுக்கள் பயனடைந்துள்ளன. 2023 - 24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அந்த இலக்கை விட அதிக அளவில் வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில்தான் முதல் முதலாக மகளிர் சுய உதவி குழு தொடங்கப்பட்டது. இந்த சுய உதவிக் குழுக்களுக்கு கொடுக்கப்படும் கடன் உதவியை அரசும், முதலமைச்சரும் கடன் தொகையாக பார்க்கவில்லை, சுய உதவிக்குழுவில் பங்கேற்றுள்ள சகோதரிகளின் உழைப்பிற்கு கொடுக்கக்கூடிய நம்பிக்கை தொகையாகதான் பார்க்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ABOUT THE AUTHOR

...view details