மத்திய நிதிநிலை அறிக்கை (2020-2021) இன்னும் 10 நாள்களில் தாக்கல்செய்யப்படவுள்ள நிலையில் இது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேந்திர குமார் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது. இதுபோன்ற நேரத்தில் ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது, விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்வது, கிராமப்புறங்களில் குளம் வெட்டுவது, சாலை அமைப்பது, பாசன வசதி செய்வது உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
இதுபோன்ற திட்டங்களில் பெரிய அளவில் முதலீடுகளை அறிவித்தால், பல பெரிய நிறுவனங்களும் இதில் கலந்துகொள்ளும். தற்போது பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதற்கு காரணம் நாட்டில் பணப்புழக்கம் இல்லாததுதான். இதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.