தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறையில் அடைக்கப்பட்ட பெண் கவுன்சிலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்வு. - Chennai News

நெடுங்குன்றம் ஊராட்சியில் சிறையில் அடைக்கப்பட்ட பெண் கவுன்சிலர், போட்டியின்றி ஊராட்சி மன்ற துணை தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

பெண் கவுன்சிலர், போட்டியின்றி  ஊராட்சி மன்ற துணை தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
நெடுங்குன்றம் ஊராட்சியில், சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி

By

Published : Oct 22, 2021, 7:52 PM IST

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் ஒன்பதாவது வார்டு உறுப்பினராக பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி என்பவர் போட்டியின்றி தேர்வாகி இருந்தார்.

நேற்று முன் தினம் பிரபல ரவுடி சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி பதவி ஏற்கும் மேடையிலேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.

இந்த சூழ்நிலையில் இன்று துணைத் தலைவருக்கானத் தேர்தலில் 14 வார்டு உறுப்பினர்களும் அவரையே முன்மொழிந்த நிலையில் போட்டியின்றி விஜயலட்சுமி தேர்ந்தெடுக்கபட்டார். இதனால், சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் போட்டியின்றி துணைத் தலைவராக விஜயலட்சுமி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 22 வயதில் யூனியன் சேர்மன்: நெல்லையைக் கலக்கும் இளம்பெண்!

ABOUT THE AUTHOR

...view details