குடியரசுத் தலைவர் ஜம்மு - காஷ்மீர் பயணம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு நாள் பயணமாக அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் ஜம்மு - காஷ்மீர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ஜம்மு - காஷ்மீர் பயணம் ஒன்றிய உள் துறை அமைச்சர் கோவா பயணம்
ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (அக்.14) தர்பந்தோராவில் புதிய தடயவியல் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக கோவா செல்கிறார்.
ஒன்றிய உள் துறை அமைச்சர் கோவா பயணம் பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி அக்டோபர் 14, 15, 16 ஆகிய நாள்கள் பள்ளிகளுக்கு பொது விடுமுறை எனத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அக்டோபர் 14, 15ஆம் தேதிகளில் மிகக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அண்ணாத்த டீசர் வெளியீடு
ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டீசர் இன்று (அக். 14) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
அரண்மனை 3 திரைப்படம் வெளியீடு
சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான 'அரண்மனை 3' திரைப்படம் இன்று (அக். 14) திரையரங்கில் வெளியாகிறது.
அரண்மனை 3 திரைப்படம் வெளியீடு