தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்டோபர் 13 முக்கிய தகவல்கள் #EtvBharatNewsToday - சென்னை மாவட்ட செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்குக் காணலாம்.

அக்டோபர் 13 முக்கிய தகவல்கள்
அக்டோபர் 13 முக்கிய தகவல்கள்

By

Published : Oct 13, 2021, 6:42 AM IST

1. கேரளாவில் பாம்பைப் பயன்படுத்தி மனைவியைக் கொடூரமாகக் கொலைசெய்த வழக்கில் கணவன் குற்றவாளி என்று நீதிமன்றம் அக்டோபர் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. இன்று (அக்.13) அவருக்கான தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படவுள்ளன.

தீர்ப்பு

2. கமல் ஹாசனின் விக்ரம் படத்தின் மூன்றாம்கட்டப் படப்பிடிப்பு இன்று (அக். 13) தொடங்குகிறது. மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து கமல் ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார்.

படப்பிடிப்பு

3. தமிழ்நாட்டில் இன்று தொடர் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

4. ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சார்ஜாவில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி 7.30 மணிக்குத் தொடங்கும். இதில், வெற்றிபெறும் அணி நாளை மறுதினம் (அக். 15) நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்

ABOUT THE AUTHOR

...view details