தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்டோபர் 11 முக்கிய தகவல்கள் #ETVBharatNewsToday - அக்டோபர் 11 செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

NEWS TODAY
NEWS TODAY

By

Published : Oct 11, 2021, 7:14 AM IST

தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை

கோவிஷீல்டு

இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட இந்தியர்கள் இன்றுமுதல் பிரிட்டனுக்கு வந்தால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி சங்கத்தை ஆரம்பித்துவைக்கும் பிரதமர்

மோடி

இந்திய விண்வெளி சங்கத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைக்கிறார். அதன்பின் விண்வெளி துறையின் பிரதிநிதிகளுடன் உரையாடுகிறார். இது விண்வெளி - செயற்கைக்கோள் நிறுவனங்களின் முதன்மையான தொழில் துறை சங்கமாகும்.

தமிழ்நாட்டில் கனமழை

மழை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள்

ஆர்சிபி - கேகேஆர்

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபில் சீசன் தொடரின் பிளே ஆஃபில் இன்று ஆர்சிபி அணி கேகேஆர் அணியுடன் மோதுகிறது.

ABOUT THE AUTHOR

...view details