- மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வண்ணம் இன்று (டிச. 08) நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற்றுவருகிறது. அதற்கு 18 அரசியல் கட்சிகள், வங்கி, தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
- இந்திய மொபைல் சேவை சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்காவது இந்தியா மொபைல் மாநாடு டெல்லியில் இன்று (டிச. 08) தொடங்குகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொலி வாயிலாக இந்த மாநாடு நடக்கவுள்ளது.
- சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்குத் தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று (டிச. 08) தீர்ப்பு வழங்குகிறது.
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் இன்று (டிச. 08) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வுசெய்கிறார்.
- AUS vs IND: ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (டிச. 08) சிட்னியில் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத்தின் இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - today important news in Tamil
இன்றைய (டிச. 08) செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்.
ஈடிவி பாரத்தின் இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #ETVBharatNewsToday