தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருமானவரித்துறை சோதனை: ஜெகத்ரட்சகன் கல்வி நிறுவன சொகுசு காரிலிருந்து ஆவணங்கள் பறிமுதல்! - அக்கார்ட் சர்வதேச பள்ளியில் சோதனை

Income Tax Raid: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சொந்தமான கல்வி நிறுவனத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு காரில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

important-documents-found-luxury-car-in-educational-institution-belongs-jagadratsakan-dmk-mp
வருமானவரித்துறை சோதனை: ஜெகத்ரட்சகன் கல்வி நிறுவன சொகுசு காரிலிருந்து ஆவணங்கள் பறிமுதல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 4:22 PM IST

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் அடையாறு வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி அலுவலகம், தனியார் நிறுவன அலுவலகம் என அனைத்து இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாரத் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் நான்கு பேரை வரவழைத்து அதன் கார்ப்பரேட் அலுவலகத்தின் உள்ளே சென்று லாக்கர்களை திறந்து தீவிரமாகச் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறையின் ஒரு குழுவினர்கள் ஜெகத்ரட்சகன் இடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மற்றொரு வருமான வரித்துறை குழுவினர்கள் கல்வி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் பள்ளி நிறுவனத்திற்கான கார்ப்ரேட் அலுவலகங்களில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:“ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் போன்று பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல” - ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

அதேபோல், கல்வி நிறுவனத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கார்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அக்கார்ட் சர்வதேச பள்ளியின் கார்ப்பரேட் அலுவலகத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூன்று சொகுசு கார்களை ஒவ்வொன்றாகச் சாவி கொண்டு வர வைத்து கார்கள் திறக்கப்பட்டு தீவிரமாகச் சோதனை செய்தனர். ஒரு சொகுசு காரின் பின்பக்கத்தில் சில முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளது அதனை உடனடியாக கைப்பற்றி எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற இரண்டு சொகுசு கார்களிலும் தீவிரமாக அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும், காரில் பதிவுகள் செய்யப்பட்ட ஆவணங்களை உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள பாரத் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகத்திலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அதன் நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும். தொடர்ந்து வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து அறைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை மெட்ரோ: 10 சதவீத சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளதாக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details