”மத்திய அரசின் ஆயுஷ் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் ”ஆரோக்கியம்" என்ற திட்டத்தினை அமுல்படுத்தி அறிவிப்பு வெளியிட்டடுள்ளதை 75 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள முன்னனி சித்தா, ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகள் தயாரிக்கும் பன்மாநில கூட்டுறவு நிறுவனமான "இம்ப்காப்ஸ்"சார்பில் மற்றும் இம்ப்காப்ஸ் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 16 ஆயிரம் சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவர்கள் சார்பிலும் வரவேற்கின்றோம்.
ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் " நிலவேம்பு" மற்றும் "கபசுரக் குடிநீர் ஆகியவற்றினை மக்களுக்கு வழங்கிடுவதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்திட இயலும் என்று தமிழ்நாடு பரிந்துரை செய்திருப்பது உண்மையிலேயே மக்களின் நலன் காக்கும் செயலாகும்.