சென்னை:மாண்டஸ் புயல் எதிரொலியாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், நேற்று (டிச.10) நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், பல இடங்களில் மரங்கள் சாந்து, மின் கம்பிகள் அறுந்து, மின் கம்பங்கள் சாய்ந்து, சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனை அகற்றும் பணிகளில், துறை சார்ந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (டிச.10) பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில், சூறைக்காற்றினால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில், தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து அருகே உள்ள வீட்டின் மீது விழுந்ததால், வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது.