தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவர் புயல் எதிரொலி: இடிந்து விழுந்த 650 ஆண்டுகள் பழமையான தர்கா! - நிவர் புயல் எதிரொலி

சென்னை: நிவர் புயலால் தொடர்ந்து பெய்த மழையில் 650 ஆண்டுகள் பழமையான தர்கா இடிந்து விழுந்ததில் சேதமானது.

650 ஆண்டுகள் தர்கா
650 ஆண்டுகள் தர்கா

By

Published : Nov 25, 2020, 3:08 PM IST

சென்னை அண்ணா சாலை எல்ஐசி அருகே 650 ஆண்டுகள் பழமைவாய்ந்த தர்கா அமைந்துள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் கனமழையானது பெய்துவந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் அந்தப் பழமையான தர்கா இடிந்து விழுந்தது.

பலத்த காற்று வீசியதில் தர்காவின் மேற்கூரையானது திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள், மின் விளக்குகள் முழுவதுமாகச் சேதமடைந்தன. மழையின் காரணமாக பொதுமக்கள் ஒருவரும் தர்காவிற்குள் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

நிவர் புயல் எதிரொலி: இடிந்து விழுந்த 650 ஆண்டுகள் பழமையான தர்கா

உடனடியாக மாநகராட்சியினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து உடைந்த மேற்கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:செம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு : அடையாற்றில் வெள்ளப்பெருக்கு

ABOUT THE AUTHOR

...view details