சென்னையில் உள்ள குடியேற்றத்துறை அலுவலகத்தில் குடிபெயர்வோர் பாதுகாவலராக பணியாற்றிய சேகர் என்பவர், 2007 முதல் 2009ம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 2.08 கோடி சொத்து சேர்த்தாகக் குற்றம்சாட்டி, சேகர், அவரது மனைவி, டிராவல் ஏஜென்ட் அன்வர் ஹுசைன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
அதிகாரி சேகர், வருமானத்துக்கு அதிகமாக 471 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாகவும், டிராவல் ஏஜெண்ட் அன்வர் ஹுசைன் குடியேற்ற அலுவலகத்தில் குடியேற்ற ஒப்புதல் பெறுவதற்காக லஞ்சம் வாங்கி தரும் ஏஜெண்டாக செயல்பட்டதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சேகர், டிராவல் ஏஜெண்ட் அன்வர் ஹுசைனையும் குற்றவாளிகள் என அறிவித்து, இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் சேர்த்து 6.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அதேசமயம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சேகரின் மனைவியை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.
குடிபெயர்வோர் பாதுகாவலருக்கு 4 ஆண்டுகள் சிறை - சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
வருமானத்துக்கு அதிகமாக 2.08 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், குடிபெயர்வோர் பாதுகாவலருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
disproportionate assets case
இதையும் படிங்க : பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து