தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம் தகவல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 2:33 PM IST

சென்னை: சென்னையில் நகர் மற்றும் அதன் புறநகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மையம் தெரிவித்த செய்தி குறிப்பில்," நேற்று (செப்.13) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (செப்.14) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா, மேற்கு வங்காள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்”என்று தெரிவிக்கபட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மட்டும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீன்வர்களுக்கு எச்சரிக்கை: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு - வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதேப்போல், இலங்கை கடலோரப்பகுதிகளிலும் சூறாவளிக்காற்று வீச இருப்பதால், மீனர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை பதிவு: கடந்த 24-மணிநேரத்தில் பெய்த மழையின் அளவு, பெருந்துறை (ஈரோடு), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 4செ.மீ, சோழிங்கநல்லூர் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 3செ.மீ , தாம்பரம் (செங்கல்பட்டு), கமுதி (ராமநாதபுரம்), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), திருவள்ளூர், அம்பத்தூர் (சென்னை), மலர் காலனி (சென்னை), மொடக்குறிச்சி (ஈரோடு), கொளச்சல் (கன்னியாகுமரி), விராலிமலை (புதுக்கோட்டை), பூண்டி (திருவள்ளூர்) மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), NIOT பள்ளிக்கரணை (சென்னை)தலா 2 செ,மீ. மழையானது பதிவானது என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வந்ததது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. தேனி பெண்கள் குஷி; அதிகாரிகள் குழப்பம்!

ABOUT THE AUTHOR

...view details