தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செப்-29 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு! - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 29ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செப்-29 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செப்-29 வரை மழைக்கு வாய்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 6:50 PM IST

சென்னை:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செப்டம்பர் 29ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் செப்டம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

அதைத்தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழை பதிவு: குடியாத்தம் (வேலூர்) 12 செ.மீ.‌மழை பதிவு, திருவண்ணாமலை, மேலாலத்தூர் (வேலூர்) தலா 10 ,செ.மீ.‌மழை பதிவு சோழிங்கநல்லூர் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 7. செ.மீ.‌மழை பதிவு, மதுராந்தகம் (செங்கல்பட்டு), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) தலா 6. ,செ.மீ.‌மழை பதிவு, தாம்பரம் (செங்கல்பட்டு), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), மலர் காலனி (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), கள்ளிக்குடி (மதுரை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), எடப்பாடி (சேலம்), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருப்பத்தூர், பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருவள்ளூர், காட்பாடி (வேலூர்), செஞ்சி (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்) தலா 5 செ.மீ.‌மழை பதிவாகியுள்ளது" என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்:செப்டமபர் 28ஆம் தேதியன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:செப்டம்பர் 25ஆம் தேதியன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
செப்டமபர் 26ஆம் தேதிக்கான எச்சரிக்கை என ஏதுமில்லை என்றும், செப்டமபர் 27ஆம் தேதியன்று, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள்.. காரணம் என்ன? மாநகராட்சி நடவடிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details