சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் தான் இயல்பை விட 47 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ள ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேல் அடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை தேனி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. சென்னையில் நேற்று (ஜூலை 28) மதியம் முதல் இன்று வரை விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த கன மழையினால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேப்போல் நாளை (ஜூலை 30) வட தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.