தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வானிலை

வட கடலோர மாவட்டங்ககளில் இடியுடன் கூடிய மிதமான மழை இன்று மற்றும் நாளையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain
rain

By

Published : Jan 17, 2022, 3:01 PM IST

சென்னை : இன்று (ஜன.17) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இன்று தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூர் PTO (நீலகிரி) மற்றும் அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : ஈரோட்டில் திடீர் மழை - மக்கள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details